Aug 31, 2020

இயேசுவின் திரு இருதய ஜெபமாலை / இயேசுவின் திரு இருதய பக்தி மாலை

                                                

 

 இயேசுவின் திரு இருதய ஜெபமாலை

கிறிஸ்துவின் ஆன்மாவே என்னைப் புனிதமாக்கும்.
கிறிஸ்துவின் திரு உடலே என்னை மீட்டருளும்.
கிறிஸ்துவின் திரு இரத்தமே என்னை எழுச்சியூட்டும்.
கிறிஸ்துவின் விலாவின் தண்ணீரே என்னைக் கழுவிடுமே.
கிறிஸ்துவின் பாடுகளே என்னைத் தேற்றிடுமே.
ஓ நல்ல இயேசுவே எனக்குச் செவிசாயும்.
உம் திருக்காயங்களுள் என்னை மறைத்தருளும்.
உம்மிடமிருந்து என்னைப் பிரிய விடாதேயும்.
தீயப் பகைவரிடம் இருந்து என்னைக் காத்தருளும்.
எனது இறப்பின் வேளையினில் என்னை அழைத்தருளும்.
உம்மிடம் வர எனக்குக் கட்டளையிட்டருளும்.
புனிதர்களுடன் எக்காலமும் உம்மைப் புகழச் செய்யும்.
  
தேவரகசிய கருத்துக்கள்:

1. பிற மதத்தினரால், பிரிவினைச் சகோதரரு அனைவராலும் இழைக்கப்படும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக செபிப்போம்.
2. மாசு நிறைந்த கிறிஸ்தவர்களால் ஏற்படும் நிந்தைகளுக்குப் பரிகாரமாக செபிப்போம்.
3. நாம் அனைவரும் கட்டிக்கொண்ட பாவங்களுக்குப் பரிகாரமாக செபிப்போம்.
4. மனிதர் அனைவராலும் வருவிக்கப்படும் அவமானங்களுக்குப் பரிகாரமாக செபிப்போம்.
5. எல்லாரும் திருஇருதயத்தை அறிந்து அன்புசெய்யுமாறு அமல அன்னை, புனிதர் அனைவரின் அன்புப் பெருக்குடன் ஒப்புக்கொடுப்போம்.

பெரிய மணியில்:
முதல் : திரு இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே…
எல்: எங்கள் இருதயத்தை உமது இருதயத்தைப் போல் மாற்றியருளும்.

சிரிய மணியில்:
முதல் : இயேசுவின் மதுரமான திரு இருதயமே…
எல்: என் சிநேகமாயிரும்.

பத்து மணி முடிவில்:
முதல் : மரியாவின் மாசற்ற இருதயமே…
எல்: என் இரட்சணியமாயிரும்

ஐம்பது மணி முடிவில்:
முதல் : இயேசுவின் திரு இருதயமே…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முதல் : பிறப்பு நிலைப் பாவமில்லாமல் உதித்த தூய மரியாவின் மாசற்ற திரு இருதயமே…
எல்: எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

முதல் : இயேசுவின் திரு இருதயமானது…
எல்: எங்கும் போற்றப்படுவதாக.

முதல் : திரு இருதயத்தின் அன்பரான தூய யோசேப்பே…
எல்: எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

முதல் : இயேசுவின் திரு இருதயமே ! உமது ஆட்சி வருக. எங்கள் பாவங்ளை மன்னித்தருளும். எனது செபம், தபம், அனுதின செயல்கள், இன்ப துன்பம் எல்லாவற்றையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். எனது இறுதி மூச்சு வரை உம்மை அன்பு செய்யவும், உம்மை மாட்சிப்படுத்தவும் வரம் தாரும்.
எல்: ஆமென்.

 
 

No comments:

Post a Comment

இயேசுவின் திரு இருதய மன்றாட்டு மாலை

                                                                   இயேசுவின் திரு இருதய மன்றாட்டு மாலை ஆண்டவரே இரக்கமாயிரும் கிறிஸ்துவே ...